Sustainability projects for four upcountry homes

Beneficiary
Project Date
2022-02-01
Type of Assistance
Supporting Sustainability - Poultry Farming
Description

Care homes in Sri Lanka are mostly dependent on public donations for most of their funding. During difficult times as during COVID-19, public contributions decrease and homes endure extreme hardship. 

Homes are exploring alternative sources of income to sustain themselves through programs such as small farms/gardens, animal husbandry and handicrafts. These activities often provide opportunities for skills training and therapeutic engagement as well.  

Enabling sustainable living is an objective in LetUsHelpNow’s vision to assist homes beyond basic needs. This month, we are supporting four homes in Upcountry to develop alternative sources of resources. Three are looking to set up poultry farming, and one home has requested assistance with land preparation for potato farming. We will provide follow up reports until these projects start to yield results.  We will also do knowledge sharing about these initiatives with other care homes.

 

இலங்கையிலிருக்கும் அனேகமான காப்பகங்கள் பொது மக்களின் நன்கொடைகளில் பெரிதும் தங்கியிருக்கின்றன. குறிப்பாக  தற்போதுள்ள கோவிட்-19 நோயச்ச காலத்தில் நன்கொடைகள் பெரும்பாலும் விழ்ச்சியடைந்துள்ளது.

அறம் செய்வோம் அறக்கட்டளையின் “அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால்” என்ற நோக்கத்துக்கு அமைய இல்லங்களில் கால்நடை வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் மற்றும் சிறு தைத்தொழில் போன்றவற்றை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னேடுக்க உதவ முனைகிறோம். இத்தகைய முன்னெடுப்புக்கள், காப்பகங்களின் தேவைகளை பூர்த்திசெய்யவும் , காப்பகங்களின் பொருளாதாரத்திற்க்கு உதவும் அதே வேளை, இல்லத்தில் உள்ளவர்கள் திறன் பயிற்சிகளை வளர்த்துக் கொள்ளவும், பொழுதுபோக்காக ஈடுபடவும் வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன.  

இதன் முதற் செயற்றிட்டமாக, மலையகத்திலுள்ள அனைத்து காப்பகங்களுக்கும் இவ்வாறான உதவி வழங்கவுள்ளதை அறிவித்து அதிலே முன்னேடுப்பு காட்டிய நான்கு சிறுவர் இல்லங்களுக்கு இம்மாதம் உதவியுள்ளோம். இதில் மூன்று இல்லங்களுக்கு கோழி வளர்பிற்க்கான கூடுகள் கட்டுவதற்க்கும்,   வளர்பிற்க்கு தேவையான ஆரம்பப் பொருட்கள் மற்றும் கோழிகள் பெறுவதற்க்கும் நிதியுதவி வழங்கியும்,  ஒரு இல்லத்திற்க்கு கிழங்கு பயிரவிடவும் உதவியுள்ளோம்.

இத்திட்டங்கள் அனைத்தையும் முதலாவது பலன் தரும் காலம் வரை பின்தொடர்ந்து அறிக்கை ஒன்றினை செய்யவும் உள்ளோம். இதன் மூலம் நாம் கற்றக்கூடிய விடயங்கள் மற்றயை காப்பகங்களுக்கு பயன்பெறும்

 

Budget
Rs 880,000.00
Project Status
Completed