COVID-19 Relief 2021 - Dry food supplies for Upcountry children homes

Beneficiary
Project Date
2021-06-01
Type of Assistance
-
Description

LetUsHelpNow Foundation provided dry food to eleven Upcountry children homes to assist them during covid-19.

Eleven Upcountry children's homes requested food supplies to get them through during COVID-19.  These homes cared for 253 children.  The financial assistance care homes received from the public had significantly reduced, thus they faced difficult circumstances. 

LetUsHelpNow purchased and delivered food directly to three homes in Matale.  Due to the lockdown, we had difficulty purchasing and delivering food directly.  However, we obtained a price list for requested items and deposited funds to homes’ bank accounts to purchase the dry food. 

During this time, we fondly remember the late Prabbaharan Selvarajah, who personally purchased and delivered the dry food to Matale homes.  We deeply miss him. 

The budget for the project was  LKR 839,500.  The funds were donated by 110 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

 

மலையகத்திலுள்ள பதினொரு சிறுவர் இல்லங்களுக்கான  கோவிட்19 நிவாரண உதவியாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்

மலையக பதினொரு சிறுவர் இல்லங்கள் கோவிட்19 நிவாரண உதவியாக உலர் உணவுப்பொருட்களை வேண்டியிருந்தன. ஏறத்தாள இருநூற்றி ஐம்பத்தி மூன்று சிறுவர்கள் இந்த இல்லங்களில் இருக்கின்றனர்.  இந்த நோயச்ச காலத்தில் பொது மக்களின் நன்கொடைகளும் கணிசமான அளவு குறைந்துள்ளது.  

இந்த செயற்றிட்டத்தில் மூன்று மாத்தளை இல்லங்களுக்கு நேரடியாக உலர் உணவுப்பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால் பின்னர் ஏற்பட்ட முடக்கு நிலை காரணமாக எம்மால் இவ்வாறு வாங்கி வழங்குதல் கடினமாக இருந்தமையால், இல்லங்கள் தமக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான பொருட்களை அவர்கள் வழமையாக வாங்கும் முகவர்களிடமிருந்து ஒரு விலைப்பட்டியலை பெற்று அதற்கான நிதியினை இல்ல வங்கிக்கணக்குகளில் வைப்பிலிட்டோம்.

மாத்தளையில் உள்ள இல்லங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை கடந்த மாதம் எம்மைவிட்டகன்ற அறம் செய்வோம் அறக்கட்டளையின் இயக்குனர் அமரர் பிரபாகரன் செல்வராஜா அவர்கள் தாமே சென்று முன்னின்று வாங்கி இல்லங்களுக்கு கையளித்ததை அன்போடு நினைவு கூறுகிறோம்.

இதற்கான நிதியான ரூபா 839,500 அறம் செய்வோம் அறக்கட்டளையின் கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா 119 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 839,500.00
Project Status
Completed