COVID-19 Relief 2021 - Basic needs assistance for four Northern children homes
LetUsHelpNow Foundation assessed and assisted four children's homes in Northern Sri Lanka with food, medicine, computer and housing supplies.
Paralyses Nursing Home, Kilinochchi cares for 15 special needs children between the ages of 14 and 44. The home was founded in 2003 and cares fulltime for children with difficult health challenges, including those paralyzed, stroke patients, and amputated. We provided LKR 81,000 to help purchase dry foods during the COVID-19 emergency.
Kilinochchi Special Needs Network was founded in 2015 and currently cares for 18 special needs children. Since, 2021 they have been caring for 6 special needs women as well. We provided LKR 125,000 to help purchase medicine.
Home for the Mentally Challenged Children, Uuduvil cares for 21 special needs children. We provided LKR 81,000 to help purchase dry foods during the COVID-19 emergency.
Holy Family Girls' Child Development Centre, Kilinochchi cares for 27 female children. Due to COVID-19 lockdown, children needed to continue their education online. We provided LKR 115,000 to purchase a computer. The computer has been very useful to children's online education.
The budget for the July projects was LKR 402,000 The funds were donated by 121 LetUsHelpNow contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.
வடக்கு மாகாண நான்கு சிறுவர் இல்லங்களுக்கான அத்தியாவசிய உதவி.
பக்கவாத பராமரிப்பு இல்லம் - கிளிநொச்சி. இங்கு மனநிலைமற்றும் உடல் அங்கம் பாதிப்புற்ற 14 வயது முதல் 44 வயது வரையான 15 பயணர்கள் தங்கியுள்ளனர். 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாராமரிப்பு இல்லம் முள்ளந்தண்டு பாதிப்புற்றவர்கள், பக்கவாதத்தினால் பாதிப்புற்றவர்கள், கை அல்லது கால் பாதிப்புற்றவர்கள் அனைவருக்குமான முழுநேர பாராமரிப்பை வழங்குகின்றது.இவர்களுக்கு கோவிட் நோயச்ச கால நிவாரணமாக உலர் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கான நிதியான ரூபா 81,000 இல்ல வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு - கிளிநொச்சி. இங்கு 28 சிறுவர்கள் தங்கியுள்ளனர். 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாராமரிப்பு இல்லம் விசேட தேவைக்குட்பட்ட குடும்ப பாராமரிப்பற்ற சிறுவர்களை பாராமரித்து வருகிறது. 2021 ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் கைவிடப்பட்ட பெண்களை பாராமரிக்க வெற்றிமனை எனும் மனநில காப்பகத்தையும் ஆரம்பித்து 6 பெண்களை பாராமரித்துவருகிறது.
இவர்களுக்கு கோவிட் நோயச்ச கால நிவாரணமாக மருத்துவ பொருட்கள் வாங்குவதற்கா நிதியான ரூபா 125,000 இல்ல வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் . ஆர்க் உடுவில், யாழ்ப்பாணம். இங்கு 21 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு கோவிட் நோயச்ச கால நிவாரணமாக உலர் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கான நிதியான ரூபா 81,000 இல்ல வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
திருக்குடும்ப பெண்கள் சிறுவர் இல்லம் - கிளிநொச்சி. இங்கு 27 சிறுமிகள் தங்கியுள்ளனர். பாடசாலைகள் முடப்பட்டு இணையவழி கல்வி தொடர்வதால் இவர்களுக்கான கணினி மற்றும் இதர சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியான ரூபா 115,000 இல்ல வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது. இவை இன்று இவர்களின் கல்விப்பயன்பாட்டிக்கு பெரிதும் உதவுகிறது.
இதற்கான நிதியான ரூபா 402,000 அறம் செய்வோம் அறக்கட்டளை கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் வாழும் 121 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது. இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.