Three phase electrical works Association to Empower the Special Needs Children Home, Kilinochchi

Beneficiary
Project Date
2021-07-15
Type of Assistance
-
Description

Association to Empower the Special Needs Children Home, Kilinochchi cares for 26 children.  Their rented building needed to be evacuated by June.  Their new building construction faced a funds shortage to be completed on time.  Specifically, they needed the electricity and plumbing works completed.  LetUsHelpNow has been focusing on projects improving the everyday lives of children.  Considering the urgent housing situation, we provided LKR 803,545 to complete the main part of the three phase electrical works: MCB (Miniature Circuit Breakers) panel, busbar, Control Main Panel, Diagram Box and Meter Box.  Other benefactors assisted with the remaining work.  Today, the children are living in the new building.

Jaffna College NCGE 1975 old students joined hands in this project and contributed LKR 383,634.  Contributor Sutha Haran coordinated students from Canada, Australia and the United Kingdom in this effort.  Thank you to Sutha Haran and Jaffna College NCGE 1975 old students.

The budget for the July projects was LKR 803,545  The funds were donated by 121 LetUsHelpNow & Jaffna College NCGE 1975 old student contributors from Canada, Australia and the United Kingdom. The receipts and thank you letters provided by the homes were shared with the donors and published online.

விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் வலுவூட்டல்நிலையம் - கிளிநொச்சி. இங்கு 26 சிறுவர்கள் தங்கியுள்ளனர். தங்களது வாடகை இல்லத்தினை ஆனி மாதம் கையளிக்க வேண்டி இருந்தாலும் புதிய கட்டிட பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்த மாத நடுப்பகுதியில் கட்டாயமாக கையளிக்க வேண்டியிருந்தனர்.  ஆனால் புதிய இல்லத்தின் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிக்கான வேலைகள் நிதி பற்றாக்குறையினை எதிர்நோக்கியிருந்தது. எமது மாதாந்த உதவிகள் சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் அவசர தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்களாகவே உள்ளன. எனவே இந்த கோரிக்கையை அவசர தேவையாக கருதி மின்சார திட்டத்தில் முக்கிய பகுதியான 3 கட்ட மின்சார உபரண நிறுவுதலுக்கு நிதியாக ரூபா 803,545.28 இல்ல வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டது. இன்று இந்த புதிய கட்டிடம் இவர்களது பாவனையிலுள்ளது.

யாழப்பாணக் கல்லுரியின் NCGE 1975 ஆண்Killinochchi Special டு பழைய மாணவர்கள் இத்திட்டத்தில் தம்மையும் இணைத்து ரூபா 383,634 இனை பங்களித்தனர். கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் வாழும் நண்பர்களை ஒருங்கிணைத்த திரு சுதா கரன்  அவர்களுக்கும் அவர்தம் நண்பர்களுக்கும் எம் நன்றிகள்.

இதற்கான நிதியான ரூபா 803,545 அறம் செய்வோம் அறக்கட்டளை மற்றும் யாழப்பாணக் கல்லுரியின் NCGE 1975 ஆண்டு பழைய மாணவர்கள் கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் வாழும் 121 தன்னார்வ நண்பர்களால் வழங்கப்பட்டது.  இல்லத்தின் உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டும் நன்றிக்கடிதமும் பெறப்பட்டு நன்கொடையாளர்களிடம் பகிரப்பட்டதுடன் அறக்கட்டளையின் இணையத்தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

Budget
Rs 803,545
Project Status
Completed